அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.@மத்தேயு 28:6
உருவப்படம்
கேத்தரின் விங்க்வொர்த்
1827–1878

மைக்கல் வெய்ஸ், 1531 (Chris­tus ist er­stan­den). ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்தில் கேத்தரின் விங்க்வொர்த் (1827–1878) (Christ the Lord Is Ris­en Again). சௌ. ஜான் பாரதி (மார்ச் 13, 2022),

ருட்டம்பர்க், யோஹான் ரோசன்மியூலர் (1610–1684) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்,
சங்கலிகள் அறுத்தே,
தூதர் போற்றி பாடிட,
என்றென்றுமாய் விண்ணிலே,
அல்லேலூ அல்லேலூயா

நமக்காய் உயிர் தந்தார்,
வேதனைகள் சகித்தே,
பஸ்கா ஆடாய் இன்றுமே,
பாடுவோம் நாமும் சேர்ந்தே,
அல்லேலூ அல்லேலூயா

சகித்தாரே யாவையும்,
சிலுவையில் தொங்கியே,
மகிமையில் வாழ்கிறார்,
கேட்டே நம் வேண்டுதலை,
அல்லேலூ அல்லேலூயா

உறங்கி கல்லறையில்,
எழுந்தர் நம்மை மீட்க்க,
இராஜாதி இராஜா அவர்
என்ற தொணி கேட்க்குதே,
அல்லேலூ அல்லேலூயா

சென்ற பாதே அறியோம்,
பாதாளத்தில் இரங்கி,
வல்லோரும் கட்டுண்டோராய்,
இப்போ விண்ணில் இராஜனாய்,
அல்லேலூ அல்லேலூயா

அறிவிக்க பணித்தார்,
தொலைந்தோரை மீட்டிட,
வேண்டுவோரை மீட்டிட,
விண் வீட்டிலே சேர்ந்திட,
அல்லேலூ அல்லேலூயா

பஸ்கா ஆடாய் பலியாய்,
மீட்டே எம்மை போஷித்தே,
பாவம் சாபம் நீக்கியே,
இராப்பகலும் பாடிட,
அல்லேலூ ஆம் ஆ ஆமேன்.