எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.@லூக்கா 10:29
உருவப்படம்
ஆலிவர் வென்டல் ஹோம்ஸ்
1809–1894

ஆலிவர் வென்டல் ஹோம்ஸ், 1887 (An­gel of Love). சௌ. ஜான் பாரதி (மார்ச் 17, 2020),

ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

வேதனை நோவுற்றோர்கெல்லாமே,
தூதனின் ஒளஷதம் வந்திறங்க,
ஒவ்வோர் உபாதைக்கும் விடுதலையாய்,
வீடில்லாதோர்கும் அடைக்கலமாம்.

காயப்பட்டோர் கண்கள் வேண்டி நோக்க,
மௌனமாய் சுருங்கும் புருவங்களும்,
உம் வாசல் திறந்திடும் முனகலுக்கே,
தடையின்றி சிறிதெனும் ஓசையின்றி.

யார் உன் உடன்பிறப்பறிவாயோ?
தெருவோரம் காயத்துடன் கிடப்பவரே,
அவர் தேவை நமது, கரம் தரவே,
வந்திட அழைத்திடும் நம் வாசல்.

பயந்து நாம் கேட்க வேண்டாமே,
அவர் யாரோ? எதற்கோ? எவ்வாறோ?
நம் இதயங்களும், நம் உடலும்,
யாவும் இரத்தம், நாம் மனு இனமே.

நிற்கும் நாம் வீரர் காத்திடவே,
பலவித காயம் உடல் நொறுங்கி,
விஞ்ஞானம் பொறுமை, நம் கை நேர்த்தி,
மீட்டிட உதவிட குணப்படுத்த.

இரக்கத்தின் தந்தையே உம் கரமே,
எம் கைகள் பிடித்திட வேண்டுகின்றோம்
பரம வைத்தியரே நீர், எம்முடனே,
எங்கள் தூய சேவை உம் பெலனால்.

உண்மை ஒளி அன்பின் காரணரே,
எம் வாழ்வில் பகிர்ந்தீர், அன்பாக,
எம்மோடிருந்து நீர் செயலாற்றும்,
துதி மகிமை, யாவும் உமக்கே.