நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.@மத்தேயு 26:41
உருவப்படம்
ஹோரசியோ ரிச்மண்ட் பால்மர் (1834–1907)

ஹோரசியோ ரிச்மண்ட் பால்மர், 1868 (Yield Not to Temp­ta­tion) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (2018),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

சோதனையால் விழாதே,
வீழ்தல் பாவமன்றோ?
ஒவ்வொரு வெற்றியும் பாடம்,
ஒவ்வொன்றும் ஒருவிதம்,
போராடு நீ தைரியமாய்,
இருளில் சிக்காமலே,
இயேசுவை நீ நோக்கு,
அவர் வழி செய்வார்,

பல்லவி

இரட்சகர் துணை நீ நாடு,
காப்பார் இருந்துன்னோடு,
வந்து தன் பெலன் ஈந்து,
இறுதி வரையிலே.

துஷ்டரோடிணங்காதே,
வார்த்தை கவனம் வை,
தேவனின் நாமம் நீ வீணே
வழங்காய் என்றுமே,
ஞானமாய் நீ நிதானமாய்,
கனிவுடன் கருத்தாய்,
இயேசுவை நீ நோக்கு,
அவர் பார்த்துக்கொள்வார்,

பல்லவி

வெற்றி பெற்றோர்க்கு கிரீடம்,
தேவன் அருளுவார்,
விசுவாசத்தால் நாம் வெல்வோம்,
விழுந்து எழுந்தோராய்,
நம் மீட்பர் அவரே,
நம் பெலன் புதுப்பிப்பார்,
இயேசுவை நீ நோக்கு
அவர் யாவும் செய்வார்,

பல்லவி