இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.@ஏசாயா 64:8

வில்லியம் என்பீல்டு 1795 (Where­fore Should Man, Frail Child of Clay). சௌ. ஜான் பாரதி (மே 19, 2020),

டியூக் ஸ்டிரீட், ஜான் ஹுட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

வெறும் களிமண்ணன்றோ மானுடர்?
தொட்டில் துவங்கி சாகும்வரை,
ஓர் நாள் வாழும் புழுவன்றோ?
பெருமை கொள்வானேன், வாழ்வினிலே.

காணும் தரிசனம் தோன்றிடவே,
மாயமாய் மறையும் காணாமல்,
அடுக்கடுக்காய் அவன் பெருமைகளே,
நொடிப்பொழுதில், மறைந்தொழியும்.

ஏதும் புரிந்திடா குழப்பங்கள்,
நடுங்கியே நடந்து தடுமாறி,
தன் ஞானம் பெரிதெனப்பெருமை கொண்டு,
ஒளியின்றி மங்கும் விளக்காக.

எண்ணில்லா அறிவீனமான செயல்,
குருகிய வாழ்வினில் வீணாக,
பெருமையும் மூடமுயற்சிகளும்,
தவறிடும் குற்ற உணர்வோடும்.

தூய நல் ஆண்டவா, என் வாழ்வில்,
சாந்தமும் தாழ்மையும் தந்திடுமே,
மிதமான மதிப்பு போதுமென்றே,
நல்லொழுக்கம் தந்து நடத்தும்.