சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.@யோவான் 14:27
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அனாமதேய, 1858 (We Bless Thee for Thy Peace, O God). சௌ. ஜான் பாரதி (மே 7, 2019),

அவோன்டேல், ஜோசியா பூத், 1887 (🔊 pdf nwc).

portrait
ஜோசியா பூத்
(1852–1929)

யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம்,
நீர் தந்த மெய் சமாதானம்,
நல் காலை தோன்றும் பகல் ஒளி
உம்மை நம்பியே வாழ்வோர்க்கு.

அப்பா யாம் வேண்டோம் நிம்மதி,
ஆனால் மெய் சாந்தமே ஆம்,
எம் வாழ்வின் சோர்வு
வேதனை சுமப்போம் எம் உள்ளத்தில்.

பராக்கிரமத்தின் வல்லமையால்,
யாம் தாங்கி சகிப்போமே ஆம்,
கண் காணா சோதனை ஊடே
முடிவில் சேர்வோம் உம்மோடே யாம்.

மெய் சாந்தமாக ஆழியில் பாயும்
ஊற்றைப்போலவே ஆம்,
யாம் என்றும் செழிப்பாய்
ஊற்றின் ஓரம் உம் ஒளி கொண்டோராய்.

ஆம் தாரும் மெய் சமாதானமே,
எவ்வாரே வாழ்வு போமோ?
எம் வாழ்வின் காலங்கள்
பூர்த்தியானதும் உம்முடன் ஏகுவோம்.