கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.@சங்கீதம் 122:1
உருவப்படம்
பேனி கிராஸ்பி
(1820–1915)

பேனி கிராஸ்பி, பிரைடஸ்ட் & பெஸ்ட், ஹோவார்ட் டோனே, மற்றும் ராபர்ட் லோரி (நியூயார்க், பிக்லோ & மெய்ன் 1875) எண் 131 (We Are Com­ing). சௌ. ஜான் பாரதி (ஜுன் 27, 2019),

கன்வேர்ஸ், சார்லஸ் குரோசாட் கன்வேர்ஸ், 1868 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும் வல்ல நாதா உம் இல்லம்,
உந்தன் ஞான வார்த்தை கேட்க, கேட்டு பற்றி நடக்க,
தாழ்மையாய் கடமை கற்றே வீழ்ந்தும் பாதம் அடைந்தே,
உம் மகிமைப்பேரொளிதான் சூழ்ந்த உந்தன் ஆசனம்.

கீதம் பாடி வாழ்த்திப்போற்றி உந்தன் அன்பின் ஈவிதே,
பாய்ந்தே பொங்கி ஓடி எங்கும் மா பெரிய கடல் போல்,
எங்கள் உள்ளம் மகிழ் கொண்டே நாங்கள் பாடி போற்றவே,
அல்லேலுயா அல்லேலுயா எங்கட் காய் பலியானீர்.

வேண்டி ஜெபித்து மன்றாடி உந்தன் ஆவி புறாபோல்,
வந்திறங்கி எங்கள் மீதே கிருபையின் கரமன்றோ?
உம்மை கெஞ்சி வேண்டி நின்றோம் பாதுகாத்தருள்வீரே,
எங்கள் கரம் விரைவாக எங்கள் உள்ளம் உமதாய். ஆமேன்