சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.@சங்கீதம் 84:12
உருவப்படம்
ஜான் ஹென்னா சாமிஸ்
1846–1919

ஜான் ஹென்னா சாமிஸ் ஹிம்ஸ் ஓல்டு அன்டு நியூ (சிக்காகோ இல்லிநாய்ஸ் பெலெமிங் ரேவல் 1887) (Trust and Obey). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 9, 2019),

டேனியல் பிரிங்க் டௌனர் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

நம் ஆண்டவரின்
வார்த்தை ஒளியில் நாம்,
நம்பி நடந்தால் அற்புதமே,
அவர் சித்தமே நாம்
என்றும் செய்திருந்தால்,
தினம் காண்போம் நல் ஆனந்தமே,

பல்லவி

கீழ்ப்படிந்து நம்பி நடந்திடு,
வழி வேறேதும் இல்லை,
நம்பி நடந்திடு. (ஆமேன்).

ஒரு நிழலுமே
கரு மேகமுமே,
அவர் புன்னகை கண்டோடிடும்,
கவலைக்கண்ணீரும்
பயம் சந்தேகமும்,
நிற்க்காது நம்பி நடந்தால்.

பல்லவி

நம் பார சுமை
மன வேதனையோ,
அவர் நம் பிரயாசம் அறிவார்,
துக்க அங்கலாய்ப்போ?
வெறுப்போ கசப்போ?
ஓடும், நாம் நம்பி நடந்திட்டால்.

பல்லவி

அவர் அன்பின் ஆழம்
கிருபையின் தூரமும்,
அவர் சமூகம் வீழ்ந்தே சேர்ந்தால்,
கருணை பரிவும்
தரும் ஆனந்தமும்,
கண்டு நடப்போம் நம்பியே நாம்.

பல்லவி

அன்பின் ஐக்கியத்தில் நாம்
அமர்ந்தவர் பாதம்,
அல்ல கூட நடந்து சென்றோ?
அவர் கட்டளையும்,
அவர் சொல்லும் கேட்டு,
பயமின்றி நம்பி நடப்போம்.

பல்லவி