உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.@யோவான் 4:23
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

சார்லஸ் வெஸ்லி, 1767 (Thou Son of God, Whose Flam­ing Eyes). சௌ. ஜான் பாரதி (ஜூன் 2, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சார்லஸ் வெஸ்லி
1707–1788

ஆண்டவா உந்தன் கண்களால்,
எம் உள்ளம் பாருமேன்,
இக்காணிக்கையை ஏற்பீரே,
தாழ்மையாய் தந்தோமே.

பணிந்தே உந்தன் ஆசனம்,
உள்ளன்பாய் வாஞ்சித்தே,
நீர் காண்பியும் மா நேர்மையாய்,
பணிவோர் யார் யாரோ?

இங்கேயும் உம்மை யார் என
அறியாதோர் உண்டோ?
மீட்கும் உம் இரத்தம் மேன்மையும்,
சிலுவை தியாகமும்.

அவிஸ்வாசம் நீர் உணர்த்தி,
அத்தேவை கற்பியும்,
மனதில் வாஞ்சை ஊற்றியே,
விளைவை விளக்கும்.

மாண்டோரை மீண்டும் வார்த்தை யால்,
உணர்த்தி தூண்டியே,
சாகாத சாவை வெல்லவே,
குற்ற உணர்வு இன்றியே.

இரட்சிக்கப்பட என் செய்வேன்,
இப்பாவி அறியேன்,
நடுங்கி பயந்தலையும்,
நான் மீட்கப்பணித்திடும்.

இக்கணமே நான் எழுந்து,
துயில் கலைத்திட்டே,
என் ஆண்டவா நான் உம்மிடம்,
என் பாவம் விட்டோடியே.

விஸ்வாசத்தால் நான் கதறி,
போராடி உம்மிடம்,
நான் மீண்டுமே பிறந்திட்டே,
நித்யமாய் வாழவே.