அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.@எபிரெயர் 10:23
உருவப்படம்
ரசல் கெல்சோ கார்ட்டர் (1849–1928)

ரசல் கெல்சோ கார்ட்டர், சாங்ஸ் ஆப் பெர்பெக்ட் லவ், ஜான் ஸ்வேனே மற்றும் கெல்சோ கார்ட்டர் (பிடெல்பியா பென்சில்வேனியா: ஜான் ஜா. ஹுட்,1886) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (2018),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்
நம்பி நிற்கிறேன்,
சதா காலம் அவர் புகழ்
எங்கும் ஒலிக்க,
உன்னதத்தில் மகிமை நான்
உயர்த்தி பாடுவேன்,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி

நம்பி நின்றேன்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தம்
என்றும் உண்மை,
நம்பி நிற்பேன், என்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தமே.

என்றும் வாக்கு மாறாதந்த
வாக்குதத்தமே,
அவிஸ்வாசம் சந்தேகமும்
வந்து சூழ்ந்தாலும்,
அவர் உண்மை வார்த்தை ஒன்றும்
என்றும் மாறாதே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி

நம்பி நின்ற வாக்குத்தத்தம்
நன்று காண்கிறேன்,
என்னையவர் கழுவி சுத்திகரித்தாரே
கட்டவிழ்த்து விடுவித்த
கிறிஸ்து அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி

கிறிஸ்து எந்தன் ஆண்டவரே
தந்த வார்த்தையே,
அன்பாய் என்னை கட்டி சேர்த்து
நித்ய வாழ்வுக்காய்,
நித்தம் அவர் தூய ஆவி
சக்தி கொண்டு நான்
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி

என்றும் நான் விழாமல் காக்கும்
வாக்குதத்தமே,
சொல்லும் பரிசுத்தாவி நான்
கேட்டு நிற்கிறேன்.
மீட்பர் மீது நம்பி சார்ந்தேன்,
எல்லாம் அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி