அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.@லூக்கா 2:13–14
உருவப்படம்
ஜேம்ஸ் மோன்ட்கோமெரி
1771–1854

ஜேம்ஸ் மோன்ட்கோமரி (1771–1854) (Songs of Praise the An­gels Sang). சௌ. ஜான் பாரதி (ஆகஸ்ட் 12, 2019),

கல்பாக், யோஹன் ஷெப்லர், 1657 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

தூதர் ஆனந்தமாக,
அல்லேலூயா ஒலிக்க,
எஹோவா படைப்பிலே,
வார்த்தையால் ஆனதெல்லாம்.

போற்றும் பாடல் எழும்ப,
பாலகன் பிறப்பிலும்,
பாடல் ஓசை கேட்டதே,
கட்டுண்டோர் கட்டவிழ்த்தே.

விண்ணும் மண்ணும் ஒழியும்,
போற்றுதல் முடிசூடும்,
புது வானம் பூமியும்,
உம் பிறப்பை போற்றிடும்.

விண் ராட்ஜ்யம் வரும் வரை,
மௌன் யாரும் காப்பாரோ?
சங்கீதம் இன் பாடலும்,
பாடாதோ திருச்சபை

பூவில் வாழும் தூயோரும்,
ஓயாமல் போற்றிடவே,
அன்பாய் விசுவாசமாய்,
பின்னர் விண்ணில் பாடவே.

கடை மூச்சின் சக்தியால்,
சாவை வெல்லும் பாடலே,
நித்ய ஆனந்தத்திலே,
வல்லமையால் பாடுவோம்.