அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்..@புலம்பல் 3:22–23
portrait
ஜான் கெபிள்
1792–1866

ஏடன் ரீ. லட்டா, 1827 (New Ev­ery Morn­ing Is the Love). சௌ. ஜான் பாரதி (ஜூன் 12, 2020),

இராகம் டியூக் ஸ்ட்ரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

உம் கிருபை தினம் புதிதன்றோ?
யாம் விழித்ததுமே உணர்கின்றோம்,
உறக்கத்திலும் காலை எழுந்தஉடன்,
உயிர் பெற்றே நல் சிந்தையுடன்.

புது தயவு அனுதினம் உணர்ந்தே,
உம்மையே நோக்கி ஜெபித்திடவே,
ஆபத்தும் எங்கள் மீறுதலும்,
உம்மையே நோக்கி விசுவாசிக்க.

அனுதின வாழ்வில் நேர்மையுடன்,
வாழ்ந்திட நேர்வழி நடந்திடவே,
காண்போம் விலைபெற்ற வெகுமதிகள்,
ஆண்டவர் ஈவார் நம் தியாகத்துக்கே.

நண்பரும் நம் நல் நினைவுகளும்,
உண்மையுடன் இறைதன்மையுடன்,
உள்மனம் மகிழ்ந்தே ஜெபத்துடனே,
விடிந்திடுமே நம் வாழ்வினிலே.

யாரையும் தள்ளி கடிந்திடாமல்,
நம்மையே மேன்மையாய் கருதாமல்,
பாவிகளே யாம் இப்பூவினிலே,
பிரனையும் நேசித்தே அனுதினமும்.

நம் அற்பமான செயல்களுமே,
நம் தேவை யாவும் சந்தித்திடும்,
நம்மை நாம் வெறுக்கதந்திடுமே,
ஆண்டவரண்டை வழி நடத்த.