அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.@I யோவான் 4:19
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வில்லியம் ரா பெதர்ஸ்டோன், 1864 (My Je­sus, I Love Thee). அப்போது பெதர்ஸ்டோன் வெறும் 16 வயதுள்ளவராக இருந்தார். சௌ. ஜான் பாரதி (செப்டம்பர் 4, 2018),

அதோனிராம் ஜ கோர்டன், 1876 (🔊 pdf nwc).

உருவப்படம்
அதோனிராம் ஜ கோர்டன்
(1836–1895)

மிச்சிகன் பிஷப் தவத்திரு இ. பி. ஹாமண்ட் அவர்கள் ஒரு கூட்டத்தில் பின்வரும் நிகழ்ச்சியை விவரித்தார். தாலந்து மிக்க இளகிய மனதுடைய நடிகை ஒருவள், பெரிய நகரின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அழகிய வீட்டின் பாதி திறந்திருந்த கதவுவழியே தன்படுக்கையில் நோயினால் வெளிரி நலிந்து காணப்பட்ட ஒரு இளம் பெண்ணைக்கண்டு, அவளை உற்சாகம் தரும் தன் திறமையையும் தோற்ற பொலிவையும் வைத்து, அவளை சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் உள்ளே சென்றதும், அந்தப்பெண்ணின் பக்தியையும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு தான் கிறிஸ்தவளாய் மாறியதுமல்லாமல் ஒரு நாடகக் குழுவின் தலைவராயிருந்த தன் தந்தையிடம் சென்று இனி நான் மேடை ஏறுவதில்லை அனைத்தையும் விட்டு கிறிஸ்துவுக்காய் வாழவேண்டுமென முடிவெடுத்துவிட்டேன், என்று சொன்னது அவள் தந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர் நம் வாழ்க்கை நீ எடுக்கும் முடிவால் மிக பாதிக்கப்படும், என்று கூற அவள் தன் தந்தையை மிகவும் நேசித்ததால் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வருவதாக கூறியதும் அவள் தந்தைக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது, அந்த குழுவிலே அவள் மிக முக்கியமான அங்கம் வகித்ததால், அவளை அனைவரும் எதிர்நோக்கியிருந்தனர். நிகழ்ச்சி நாளன்று மாலையில் அவள் தந்தை மிகக்களிப்புடன் தன் மகளை வென்றுவிட்டோமென காத்திருக்க, கூட்டம் அரங்கத்தை நிறைக்க ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டாள், உள்ளே வந்ததும் கரவொலி எழும்ப பிரகாசித்த முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்தின் மேடையில் வந்து நின்று:

நீர் என் சொந்தம் இயேசுவே
நான் உம்மை நேசிக்கிறேன்,
என் பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன்,
என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே,
நான் நேசிப்பேன் உம்மையே இப்போதும், எப்போதும்.

என்று மீண்டும் மீண்டும் பாடி கண்ணீரோடு விடைபெற்று அதன்பின் மீண்டும் ஒருபோதும் மேடையை அண்டாமல் ஆண்டவருக்கென தன்னை அர்ப்பணித்து நற்செய்தியின் ஊழியம் செய்து வந்தாள், அவளின் வாழ்க்கையை கண்ட தந்தையும் மனம் திரும்பி ஊழியத்தில் ஈடுபட்டார், இவர்கள் ஊழியத்தால் அநேகர் ஆண்டவரண்டை நடத்தப்பட்டனர்.

நீர் என் சொந்தம் இயேசுவே
நான் உம்மை நேசிக்கிறேன்,
என்பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன்,
என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே,
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும், எப்போதும்.

நான் நேசிக்குமுன்பே நீர் நேசித்தீரே,
சிலுவையில் மாண்டே மன்னிப்பீந்தீரே
முள் கிரீடம் எனக்காக, அணிந்தீர் என் ஸ்வாமி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.

நான் வாழ்ந்தாலும் நேசிப்பேன்
நான் மாண்டு போனாலும்,
என் சுவாசம் நீர் தரும்வரை உம்மை நேசிப்பேன்,
என் கண் மூடி சாக நான் காத்திருக்கும் போதும்
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.

வான் வீட்டில் என்றும், மகிமை பேரின்பமே,
நான் அங்கும் நின்றும்மை, ஒளியில் துதிப்பேன்,
நல் ஜீவ கிரீடம் சூடி ஆனந்தித்தே பாடி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.