கிறிஸ்டியன் ஹார்ட் சாங்ஸ்தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.@I யோவான் 4:16
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

சார்லஸ் வெஸ்லி, இரட்சிப்பை கிறிஸ்துவின் இயேசுவின் இரத்தத்தால் தேடுகிறவர்களுக்கும் பாமாலைகள், 1747 (Love Di­vine, All Loves Ex­cel­ling). இப்பாடல் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், கேத்தரின் மிடில்டன் இவர்களின் வெஸ்ட் மின்ஸ்டர் ஆபியில் நடைபெற்ற திருமணத்தில் பாடப்பட்டது. லண்டன், ஏப்ரல் 29 2011. சௌ. ஜான் பாரதி (மார்ச் 01, 2019),

பீச்சர், ஜான் ஜுண்டல், கிறிஸ்டியன் ஹார்ட் சாங்ஸ், 1870 (🔊 pdf nwc).

portrait
சார்லஸ் வெஸ்லி (1707–1788)

ஈடில்லாத தூய அன்பே,
விண் பேரின்பம் பூவிலே,
எம்மை உந்தன் விந்தை வாசம்
வைத்து கிருபையால் சூடும்.
மா தயாபரர் நீர் ஸ்வாமி
உம் அன்பிற்களவேது?
இரட்சிப்பினால் எம்மை காத்து
வாரும் எம் அஞ்சும் நெஞ்சில்.

ஊதும் உமதன்பின் ஆவி
நொந்த எங்கள் நெஞ்சிலே,
உம்மாலே யாம் ஏற்போம்
எங்கள் நிம்மதியின் நிச்சயம்.
பாவம் செய்யும் சுவாபம் நீக்கும்
நீரே அல்பா ஒமேகா,
போக்கும் எமதவ்விஸ்வாசம்
எங்கள் உள்ளம் மீண்டிடும்.

எல்லாம் வல்லோரே நீர் வாரும்
யாம் உம் வாழ்வை பெற்றிட,
வேகம் உமதாலையமே
வந்தே மீண்டும் ஏகாமல்,
உம்மை என்றும் போற்றி வாழ்த்தி
சேவை செய்தே மேலோர் போல்,
வேண்டி நின்றே புகழ் பாடி
ஆர்ப்பரிப்போம் உம் அன்பில்.

உம் படைப்பை கரை ஏற்றும்
யாம் எக்குற்றம் அற்றோராய்,
உம் இரட்சிப்பை கண்டே ஏற்று
முற்றும் மாற்றம் பெற்றோராய்.
மகிமை மேல் மகிமையால்
விண் வீடடையும் வரை,
எம் கிரீடம் உம் பாதம் வைப்போம்
வியந்தன்பை போற்றியே.