அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்.@யாத்திராகமம் 2:5
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கேரலின் வின்பிரே கில்லட், 2009 (Long Ago, When Pha­raoh’s Daugh­ter). சௌ. ஜான் பாரதி (மார்ச் 31, 2020).

நெட்டில்டன், ஜான் வெய்த், 1813 (🔊 pdf nwc).

உருவப்படம்
கேரலின் வின்பிரே கில்லட்
(1961–)

முன்னோர் நாளில் பார்வோன் மகள்
ஆற்றின் ஓரம் நடந்தாள்,
கூடை ஒன்றில் பத்ரமாக அழகானதோர் குழந்தை,
பச்சிளம் குழந்தையது வாழ தாயும் வைத்தாளோ?
ஈயும் அன்பு ஆழ்ந்த அன்பு பிறரை காக்கும் அன்பதே.

ஆண்டவா நீர் ஆசீர் தந்தீர்
உந்தனன்போடு வாழவே,
சிறியோரை அணைத்தால் யாம் உம்மையே அணைப்பதாம்,
இவ்வுலகில் அன்பு இன்றி பாடுரும் சிறாருண்டு.
அன்பு எம்மை இணைப்பதுதான் எங்கள் ஜெபத்தின் பதிலாம்.

ஆண்டவா நீர் எம்மை ஏற்று
உம் சொந்தமாய் கொண்டீரே,
எங்களை நீர் ஏற்றதாலே மானுடமே ஒன்றன்றோ?
ஆசீர் தாரும் அணைப்போர்க்கு சுதந்திரமாய் விட்டோர்க்கும்.
ஒவ்வோர் சிறாரும் நேசிக்கப்பட திருச்சபைகள் முயல.