மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.@ஏசாயா 53:4
உருவப்படம்
வில்லியம் ஆர்கட் கஷ்ஷிங்ஸ்’ (1823–1902)

வில்லியம் ஆர்கட் கஷ்ஷிங்ஸ்’ ன் தி காஸ்பல் கொயர், இரா டேவிட் சாங்கி மற்றும் ஜேம்ஸ் மெக்கிரஹனன் அவர்களால் திருத்தப்பட்டு (நியூயார்க், சிக்காகோ இல்லிநாய்ஸ், பிக்லோ மெய்ன் 1885) எண், 69ல் வெளியிடப்பட்டது (Je­sus Knows Thy Sor­row). சௌ. ஜான் பாரதி (2018),

போர்ட் காலின்ஸ், இரா டேவிட் சாங்கி (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

உன் துயரம் எல்லாம்,
இயேசு அறிவார்,
உன் மனதின் பாரம்,
கேட்பார் உன் ஜெபம்,
தயங்காதே நம்பு
உந்தன் துன்பம் சொல்லு,
தீர்ப்பார் அவர் உந்தன்
எல்லா வேதனை.

அவர் உள்ளம் நம்பு,
நீ விசேஷமே,
அவர் உன்னை காப்பார்,
சோதனையிலே,
பாதுகாப்பாய் சேர்த்தே,
அவர் வழிசெல்ல,
மகிமையை நோக்கி
முன்னே செல்லவே.

குழப்பங்கள் நீங்க,
குமுறல் கேட்பார்,
காயப்பட்ட நெஞ்சம்,
மனம் கசந்தே,
பெலன் தருவாரே,
ஆறுதலும் தந்து,
பயம் நீக்கி உந்தன்
கண்ணீர் துடைப்பார்.