அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.@லூக்கா 14:33
உருவப்படம்
ஜட்சன் வீ. வான் டெவென்டர்
1855–1939

ஜட்சன் வீ. வான் டெவென்டர், 1896 (I Sur­ren­der All). ஜேம்ஸ் அட்கின்ஸ் மற்றும் வில்லியம் ஜே கிர்க்பாட்ரிக் இவர்களின் தி யங் பீப்பிள்ஸ் ஹிம்னலில் வெளியானது. நாஷ்வில்லி டென்னிசி வெளியீட்டார், மெத்தடிஸ்ட் எபிஸ்கோப்பல் திருச்சபை 1897. எண் 7. சௌ. ஜான் பாரதி (2018),

வின்பீல்ட் ஸ்காட் வீடன், 1896 (🔊 pdf nwc). வீடன் குறிப்பிடத்தக்க புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார், இருப்பினும் இப்பாடலின் தலைப்பே அவரது கல்லறையில் காணப்பட்டது. இதனால் இப்பாடலே இவர் மிக விறும்பியதாக கருதலாம்.

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

செர்பிங் கேம்ப் மீட்டிங் வேதாகம குழுமத்தின் ஸ்தாபகர் ஜார்ஜ் செப்ரிங் அவர்கள் இல்லத்திலிருந்தபொழுது எழுதியது. சில காலமாய் நான் கலைத்துறைக்கு செல்வதா? அல்லது முழுநேர ஊழியத்திற்கு செல்வதா என்ற போராட்டத்திலிருந்தேன் ஓரு முக்கியமான சந்தர்பத்தில் நான் என்னை முற்றிலும் கடவுளுக்கு சமர்ப்பித்தேன். என் வாழ்வில் ஓரு புதிய நாள் வந்தது. நான் ஓரு சுவிசேடகனாகி என்னுள்ளில் இருந்த நானே அறிந்திராத தாலந்தை அறிந்து கொண்டேன். கடவுள் ஒரு பாடலை என்னுள்ளில் மறைத்து வைத்திருந்திருக்கிறார், என்னை லேசாக தொட்டு பாட தூண்டினார்.

ஜட்சன் வான் டெவென்டர்

தென்னிந்திய திருச்சபையின் இசை மற்றும் வழிபாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராக நான் 16 ஆண்டுகளாக இருப்பதால் இதன் நான்கு மாநிலங்களிலும் பிரயாணம் செய்யும் வாய்ப்பை கடவுள் எனக்கு தந்திருக்கிறார். திருச்சபைகளை சந்தித்ததின் அனுபவத்தில், மேற்கண்ட இந்த பாடல் மிகப்பிரபலமான சில பாடல்களுள் ஒன்று என கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் ஆங்கிலம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த பாடலாகவும் இருக்கிறது.

சௌ. ஜான் பாரதி, 2018

இயேசுவிடமே சரணடைந்தே
யாவையும் நான் ஒப்புவிக்கிறேன்,
நேசித்தே நான் நம்பி அவரை
அனுதினமும் வாழ்வேனே,

பல்லவி

சரணடைந்தேன் நான்
சரணடைந்தேன் நான்
எந்தன் நேச மீட்பரே நான்
சரணடைகிறேன்.

இயேசுவிடமே சரணடைந்தே
அவரின் பாதம் வீழ்கிறேன்,
இந்த உலக சிற்றின்பங்கள்
யாவையும் நான் வெறுத்தே,

பல்லவி

இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமக்குத்தந்தேன்,
பரிசுத்தாவி சாட்சியாக
நீர் எனக்கு நான் உமக்கு,

பல்லவி

இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமதாக்கும்,
உந்தன் வல்லமையால் நிரப்பும்
உந்தன் ஆசீர் தாருமே,

பல்லவி

இயேசுவிடமே சரணடைந்து
இப்போ பெற்றேன் அவர் ஒளியை,
இரட்சிப்பின் மா மகிழ்ச்சி இதுவே
ஸ்தோத்திரம் உம் நாமத்திற்கே,

பல்லவி