என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.@சங்கீதம் 77:2
உருவப்படம்
ஜேம்ஸ் மோன்ட்கோமெரி
(1771–1854)

ஜேம்ஸ் மோன்ட்கோமெரி, ஜேம்ஸ் மோன்ட் கோமரி, 1819 (In Time of Tri­bu­la­tion). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 1, 2020),

இராகம் அரேலியா, சாமுவேல் செபாஸ்டியன் வெஸ்லி, 1864 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

உபத்ரவத்தின் காலம், எம் ஓலம் கேளுமே,
மா தாழ்மையாக வேண்டி, உம்மிடம் வந்தோமே,
துக்கத்தால் எங்கள் உள்ளம், உடைந்தே கெஞ்சுதே,
எம் கண்கள் கண்ணீர் பொங்க விழித்தே விம்முதே.

அக்கால வாழ்வை கண்டோம் இக்காலம் இவ்வாரோ?
கனிகளற்ற காலம், வேதனைதான் மிஞ்சுதே,
ஆனந்த பாடல் பாடி, இப்போதமைதியே,
துக்கத்தின் ஆழ்ந்த ஓலம் மிஞ்சுதே ஏமாற்றம்.

எரிந்தே தள்ளினீரோ? காலம் பதில் சொல்லும்,
உம் தயவான கிருபை, பிறர்க்கும் பகிரேனோ?
அவர் மகா தயவு, தராதொழிவாரோ?
இதென்தன் பெலவீனம் காணேன் அவர் வழி.

ஆராய்ந்து எண்ணி பார்ப்பேன் அவர் நடத்துதல்,
அவர் என் கோட்டையாமே, விஸ்சுவாசத்தால் நிற்ப்பேன்,
விந்தையாம் உம் செயல்கள், மா தூயதும் வழி,
முழங்கும் மின்னலோசை உம் துதி ஒலிக்கும்.

உம் முன் அக்கால மாந்தர் உம் கிரியை கண்டனர்,
நடுங்கி நோக்கி அஞ்சி பிரம்மித்தசையாமல்,
மேகங்கள் மின்னலோடு, பூமியும் அதிர்ந்து,
பிரகாசமாக தோன்ற இருளும் சூழ்ந்ததே.

உம் பாதை நீர் மேல் தோன்றும் அறியோம் உம் வழி,
ஆதாமின் பிள்ளை நாங்கள் நீர் மாத்ரம் போதுமே,
கடல் வழி நீர் நடத்த, நீர் கொண்ட மக்களே,
அலைகள் முன்னே சென்று மீட்டீர் பஸ்காவினில்.