இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.@யோவான் 20:15
portrait
ச்சார்லஸ் அஸ்டின் மைல்ஸ்
(1868–1946)

ச்சார்லஸ் அஸ்டின் மைல்ஸ், 1912 (In the Gar­den). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 27, 2020),

ச்சார்லஸ் அஸ்டின் மைல்ஸ் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

நான் தோட்டத்தில் தனியனாய்,
பனி சாரல் ரோஜாவின் மீது,
எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன்,
என் இயேசு மீட்பர் சப்தமே,

பல்லவி

அவர் என்னுடனே நடக்கிறார்,
அவர் சொந்தம் நான் என்கிறார்,
என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள்,
வேர் யாரும் அறியாரே.

இனிமையாம் அவர் குரல்,
அங்கு பாடும் பறவை கேட்க,
அந்த கீதம்தான் அவர் தந்ததே,
என் ஆன்மா பாடுதே இதோ,

பல்லவி

நான் அவருடனிருப்பேன்,
இன்னும் இராமுழுவதும் இங்கே,
என்னை போவென்றார் அவர் அன்பின்
வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ,

பல்லவி

illustration