கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.@சங்கீதம் 119:156
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

வி. ஸ்பென்சர் வால்டன், அதோனிராம் ஜட்சன் கோர்டோன் மற்றும் ஆர்த்தர் தா. பியர்சன் இவர்களின் கரோநெஷன் ஹிம்னலில் (பிலடெல்பியா பென்சில்வேனியா அமரிக்கன் பாப்டிஸ்டு வெளியீட்டார் சங்கம் 1894), எண் 392. சௌ. ஜான் பாரதி (ஜனவரி 03. 2019),

அதோனிராம் ஜட்சன் கோர்டோன் (1836–1895) (🔊 pdf nwc).

உருவப்படம்
வி. ஸ்பென்சர் வால்டன் (1850–1906)

தம் மென்மையாலே தேடி,
என் பாவம் நோயும் தீர்க்க,
தன் தோளின்மீது தாங்கி
தம் மந்தை சேர்த்தாரே,
விண்தூதர் பண் இசைக்கவே,
வான் ஓசை கேட்கும் நேரமே,

பல்லவி

என்னை ஏற்ற அன்பு, இரத்தத்தாலே மீட்டு,
மீண்டும் என்னை மந்தை சேர்த்ததே,
என்னை மீண்டும் மந்தை சேர்த்ததே.

என் காயத்தோடே கண்டார்,
நல் எண்ணை இரசம் வார்த்தார்,
என் காதில் மெல்ல சொன்னார்,
நீ எந்தன் சொந்தமே,
நான் எங்கும் கேளா இன்பமே,
என் துன்பம் யாவும் நீங்கிற்றே,

பல்லவி

கூர் ஆணி காயம் காட்டி,
தம் சொந்த இரத்தம் சிந்தி,
முள் கிரீடம் ஈன சின்னம்,
என் பாவம் போக்கவே,
நான் பாவியாயிருந்துமே,
மா வேதனை எனக்காக,

பல்லவி

அச்சன்னதியில் சேர்ந்தேன்,
பிரகாசமாக தோன்ற,
மா விந்தை காட்சியாலே,
மெய் ஆசீர் உணர்ந்தேன்,
ஆ நித்யகாலம் போலவே,
போதாது காலம் போற்றிட,

பல்லவி

இக்காலம் செல்ல செல்ல,
எல்லாம் இப்போது ஓய்ந்து,
நல் காலைக்காய் நான் சாய்ந்து,
பிரகாசம் வேண்டியே,
அவர் நம்மை அழைப்பாரே,
தம்மோடு என்றும் தங்கிட,

பல்லவி