இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.@ஏசாயா 62:8
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

அடிலேய்ட் அடிசன் போலார்ட், 1907 (Have Thine Own Way, Lord). சௌ. ஜான் பாரதி (ஜுலை 10, 2018), கடவுள் தன்னை ஒரு மிஷனரியாக ஆப்ரிக்காவுக்கு அனுப்புவாரென போலார்ட் நம்பினார், ஆனால் அதற்கேற்ற செலவுக்கான பணத்தை சேகரிக்க முடியவில்லை, இந்த சூழலில் ஒரு ஜெபக்கூட்டத்திற்கு சென்றபோது ஒரு மூத்த சகோதரி ஜெபிப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள், அதில்: சரிதான் ஆண்டவரே உம் விருப்பப்படி ஆகட்டும், நீர் காட்டும் உம் வழியே நடக்கட்டும் என்ற வார்த்தைகள் அடிலெய்டை மிகவும் உற்சாகப்படுத்தியது இதன் விளைவாய் அன்றிரவு இந்த பாடலை இயற்றினார்கள்.

அடிலேய்ட், ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ், நார்த்பீல்ட் ஹிம்னல் அலெக்சாண்டரின் துணை நூலுடன் 1907 (🔊 pdf nwc).

portrait
ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ்
1846–1945

உம் வழியே ஆம் ஆண்டவரே,
குயவன் நீரே, களிமண் நான்,
வனையும் என்னை உம் சித்தம் போல்,
காத்து நிற்கின்றேன், அசையாமல்.

ஆராய்ந்து பாரும் இன்றென்னையே,
சுத்திகரியும், வெண்பனிபோல்,
கும்பிடுகின்றேன் உம்மையே நான்,
தாழ்மையாய் வீழ்ந்து உம் பாதத்தில்.

காயமுற்றோனாய் வேண்டுகிறேன்,
ஆற்றல் என் ஆற்றல், உமதென்றும்,
தொட்டென்னை தேற்றும் மீட்பரே நீர்,
என் காயம் முற்றும் குணமாக்கும்.

பற்றிடும் என்னை முற்றிலுமாய்,
நிரப்பிடும் நீர் உம் ஆவியால்,
இயேசுவே என்னில் வாழ்ந்திடுமே,
மற்றோரும் காண என்னில் வாழும்

ஆமேன்.