தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.@யோவான் 3:16
உருவப்படம்
ஜான் மேசன் நீல்
1818–1866

ஹென்ரிச் சூசோ (?–1366) (Good Chris­tian Men, Re­joice). லத்தீனிலிருந்து ஆங்கிலத்தில் ஜான் மேசன் நீல் அவர்களின் கிறிஸ்துமஸ்டைட் கேரல்ஸ் (லண்டன் 1853). தூர்கள் பாட கேட்ட சூசோவும் இப்பாடலை தொழுகையின் பாடலாக உடன் பாடி ஆடினார் என்பது கிராமப்புற கதையாக சொல்லப்பட்டது. சௌ. ஜான் பாரதி (2018),

இன் டல்சி ஜுபிலோ, 14ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய இராகம், ஹார்மனி கிறிஸ்துமஸ் கேரல்ஸ் ஓல்டு அன் நியூ 1871 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

நல் கிறிஸ்தோரே எல்லோரும்,
மெய் ஆன்ம வாஞ்சையோடும்,
சொல்லும் செய்தி கேட்ப்பீரே,
இன்று கிறிஸ்து இயேசு ஜென்மித்தார்,
காளை கழுதை வணங்குதே,
இப்போதவர் முன்னணையிலே
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்,

மெய் இன்பம் இனி என்றுமே,
சந்தோஷம் பொங்கி பொங்குமே,
இன்று நமக்காய் பிறந்தாரே,
மோட்ச வாசல் நமக்காய் திறந்தாரே,
மாந்தர் வாழ்வார் என்றுமே,
ஆ நமக்காக வந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்,

மரண பயம் இனி இல்லை,
ஆனந்தமே மகிழ்ச்சியே,
இரட்சிக்கவே, பிறந்தாரே,
உன்னை என்னை எல்லோரையும்,
என்றும் விண்ணின் வாழ்விற்கே,
மீட்கவே பிறந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்.