நான் உங்களைச் சிநேகிதர்; என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.@யோவான் 15:15
portrait
ஜோசப் கொர்நேலியு லுகேட்
1864–1947

ஜோசப் கொர்நேலியு லுகேட், 1898 (Friend­ship with Je­sus). .

ஸ்தேவான் கொலின்ஸ் போஸ்டர் (1826–1864) (🔊 pdf pdf nwc).

உருவப்படம்
ஸ்தேவான் கொலின்ஸ் போஸ்டர்
1826–1864

இயேசுவின் நண்பன் என்பதால்
தான் என்ன நல்பாக்கியம்!
நண்பன் எவ்விடம் உண்டெங்கோ?
வான் நோக்கி நடத்த.

பல்லவி

இயேசுவின் நட்பு
விண்ணின் தொடர்பு!
ஆ! இன்ப, ஆழ்ந்த, இவ்வைக்கியம்!
இயேசு என்றும் நண்பரே.

நான் எஜமான் என அழையா
இராஜாதி ராஜா.
நண்பன் நான் என அழைத்திடும்
அன்பு நல்தேவன்.

பல்லவி

எல்லா நண்பர் கைவிட்டாலும்v
நம் நண்பர் கைவிடார்.
தீயோன் எதிர்க்கும் வேளையும்
நம்மோடு நிற்பாரே.

பல்லவி

சோர்வு நோவு வேளையிலும்
நம் முன் நிற்பார் நண்பர்;
அங்கும் மகிழ்வித்து தேற்றும்
கைவிடா நல்நண்பர்.

பல்லவி

சாநேரமும் நிற்பார் நண்பர்.
வானில் வரவேற்பார்;
புது எருசலேம் நோக்கி
வழி நடத்துவார்.

பல்லவி