ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.@சங்கீதம் 90:1
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எலிசா மார்கன் ஷெர்மேன், இன் ஜாய்புல் லேய்ஸ், ராபர்ட் லோரி மற்றும் ஹோவார்ட் டோனே (சிக்காகோ, இல்லிநாய்ஸ், பிக்லோ & மெய்ன் 1884), பக்கம் 106 (Fa­ther, Be­fore Thy Throne). சௌ. ஜான் பாரதி (மார்ச் 1, 2019).

பெத்தானி, லோவெல் மேசன், 1856 (🔊 pdf nwc).

portrait
லோவெல் மேசன்
(1792–1872)

சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ,
சிம்மாசனமுன்னே, வீணே ஏகேனே,
என் வேண்டல் கேளுமே, இயேசுவின் மூலமே,
ஆன்மாவில் நம்பிக்கை விழிக்கச்செய்யும்.

என் உள்ளம் வைத்தேனே, உம் முன்னமே,
காத்திங்கே கிடந்து, குற்றம் செய்தங்கே,
வந்தே தீ மூட்டிடும், நம்பி முனைந்திட,
தூங்கிடும் யாழை நீர் துதிக்கச்செய்யும்.

நீர் எங்கள் தாபரம், எம் வாழ்விலே,
உம் அன்பை காண்கிறோம் காலா காலமாய்,
சூராவளி புயல் நீரே எம் தாபரம்,
எம்மை நடத்திடும் தூய எம் தந்தாய்