எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.@சங்கீதம் 57:1
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆனி ஸ்டீலே, ஆன்மிக கவிதைகள் 1760 பக்கங்கள் 143–44, திருத்தப்பட்டது (Dear Ref­uge of My Wea­ry Soul): கலங்கிய மனதிற்க்கு கடவுள் ஒருவரே ஆதரவு. சௌ. ஜான் பாரதி, ஜனவரி 17, 2019.

தூய கொலம்பியா, பண்டைய ஐரிஷ் இராகம் (🔊 pdf nwc).

நைந்த என் ஆத்துமத்திற்கு,
புகலிடம் நீரே,
என் துன்ப நேரத்திலுமே,
என் நம்பிக்கையும் நீரே நீர்தாமே.

பயம் என்னை சூழ்ந்தாலுமே,
பற்றிக்கொள்வேன் நான் உம்மை,
உம் பாதம் வைத்தேன் பாரம் வேதனையும்
ஊற்றுவேனே நான் அங்கே.

நான் உம்மிடம் ஏறெடுப்பேன்,
நீர்தான் என் ஆறுதல்,
உம் வார்த்தை இன்ப தீர்வாமே,
என் நோய்க்கும் ஒளஷதமுமாகுமே.

சந்தேகம் சோர்வும் நெருக்க,
பயந்தேன் உம்மை நோக்க,
உம் தேற்றுதல் காணாமலே,
விஸ்வாசம் குன்றி அஞ்சினேனே நான்.

எங்கே நான் செல்வேன் நீரின்றி
என் பற்று வேரில்லை,
என் ஆன்மா உம்மில் சார்ந்திட,
வீழ்ந்தேன் உம் பாதம் சாஷ்டாங்கமாக.

அழைத்தீரே நீர் உம்மண்டை
வீணேபோமோ? நான் வந்திட்டால்
கண் காணாமல் இருப்பீரோ?
நான் கெஞ்சும் போது ஆண்டவா.

கருணை கொண்டே நீர் கேட்பீரே,
என் வேதனை நான் காண்பேன்
உந்தன் காருண்யம் என் வியாகுலம்
அங்கே உம் பாதம் வைப்பேனே.

உம் தயவின் கிருபாசனம்
நான் இளைப்பாரவே,
உம் பாதம் நின்று உம் சித்தம் நான்
செய்தென்றும் காத்திருப்பேனங்கே.