விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி.@எபேசியர் 3:17
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1707 (Come, Dear­est Lord). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 8, 2023),

இராகம் டியூக் ஸ்ட்ரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வாரும் அன்பான ஆண்டவா,
வந்தெங்கள் உள்ளம் தங்கிடும்,
விசுவாசம் அன்பை உணர்ந்திடவே,
சொல்லொண்ணா இன்பம் கொண்டோராய்.

நிறப்பும் எங்கள் உள்ளங்கள்,
உம் வல்ல சக்தி எம்மில் தங்கிட,
ஆழம் நீளம் உயரமும்,
எல்லையிலா உம் கிருபையுமே,

எல்லா புகழும் மகிமையுமே,
எம்மால் எண்ணவும் கூடாதே,
உம் வல்லமையும் பராக்கிரமமும்,
சபைகள் மூலம் கிறிஸ்துவுக்கே.