தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.@யோவான் 4:24
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஜான் எல்லர்டன், 1870 (Be­hold Us, Lord, a Lit­tle Space). சௌ. ஜான் பாரதி (மே 26, 2020),

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஜான் எல்லர்டன்
1826–1893

Lyrics

ஆண்டவா பாரும் எங்களை,
அனுதினமுமாய்,
உம் ஆலயம் யாம் அண்டியே,
உம்மோடமைதியாய்.

எம் வாழ்வின் சூழல் சீற்றமே,
தொழில் முயற்சியும்,
எம்மை உம்மோடு சேர்த்தொன்றாய்,
தொழவிடாமலே.

இவைகள் மாத்ரம் தடையல்ல,
யாம் உம்மை சேரவே,
எம்மீது உந்தன் ஆசீரே,
வந்தென்றும் தேற்றுமே.

செழிக்கும் ஆலை தொழிற்சலை.
நிலம் கடல்வளம், விஞ்ஞானம்
உலகின் கலைகளில்,
உம் ஆட்சி காண்கிரோம்.

பிறந்தோம் யாம் விண்வீட்டிற்காய்,
உம் செய்கையால் கண்டோம்,
உலகின் ராட்ஜியம் யாவுமே,
உமதே வேறேது.

ஜெபங்களும் எம் தொழுகையும்,
அவ்வாரே செய்யவும்,
நீர் காட்டி கற்பித்திரே அன்று,
தொழுதல் எம் கடன். ஆமேன்.