கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.@I கொரிந்தியர் 15:20
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

1832 ஆம் ஆண்டின் அமிதிஸ்ட் அல்லது கிறிஸ்தவ மலர், எனும் இதழின் முன்னுரையில் - இயேசுவினில் உறக்கம் எழுதியது திருமதி மக்காய்: இந்த எளிமையான ஆனால் ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம் டோவன்ஷயர், எனும் ஊரில் ஒரு கல்லறையிலிருந்த வாசகம் இப்பாடல் பிறக்க காரணமாயிருந்தது. சௌ. ஜான் பாரதி (19 செப்டம்பர் 2018),

ஹாம்பர்க் லோவெல் மேசன், 1824; முதன்முதலாக பாஸ்டன் ஹேடன், ஹான்டல், சமூகத்தின் திருச்சபை ராகங்கள், மூன்றாம் தொகுப்பில் வெளியானது 1825 (🔊 pdf nwc).

உருவப்படம்
லோவெல் மேசன் (1792–1872)

இப்பாடலின் ஆசிரியை தான் மரிப்பதற்க்கு ஒருவருடத்திற்கு முன்னர் எழுதியது - டோவன்ஷயர் எனும் ஊரில் பசுமையான தெருக்கள் வழியாக என் சிநேகிதருடைய குதிரை வண்டியில் சென்றுகொண்டிருக்கும் சமயம் பென்னிகிராஸ் என்னுமிடத்திற்கு வந்ததும் அங்கிருந்த கல்லறை தோட்டத்திற்கருகில் வண்டியை நிறுத்தி அங்குள்ள கல்லறைகளை பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தபோது மிகவும் அழகும் அமைதியும் மனதில் என்றும் நிலைத்திருக்கக்கூடிய பசுமையும் செயற்கையான நடைபாதையோ, அலங்காரமோ இல்லாமல் இருப்பினும் கவனிப்பாரற்ற நிலை இல்லாமல் ரம்மியமாக இருந்தது, இந்த சூழலில் ஒரு கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த இயேசுவினில் உறக்கம் என்ற வாசகம் என்னை ஆட்கொண்டு என் மனதை விட்டகலாதிருந்தது. நான் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் பென்சிலை எடுத்து இப்பாடலை, இது அநேகருடைய கல்லறையிலும் பொறிக்கப்படும் என அறியாது எழுதினேன்.

சாங்கி, பக்கம்: 115–17

இயேசுவினில் இளைப்பாறினால்
மீண்டும் அழ எழுவாரோ ?
மெய் நிம்மதியின் ஓய்விதுவே
பகைஞரும் நம்மைஅண்டாரே

ஆ என்ன இன்ப உறக்கமே
இயேசுவினில் ஓய்ந்த தூக்கமே
மேய் நம்பிக்கையில் பாடவே
சாவின் கூர் என்றோ நீங்கிற்றே

மெய் நிம்மதி நல் அமைதி,
மீண்டும் எழ அதாசீரே,
வேதனை பயங்களின்றியே,
இரட்சகரின் வல்லமையிதே.

கிறிஸ்துவுக்குள் என் உறக்கம்,
மெய்யான ஆசீர்வாதமே,
என் சாம்பல் இங்கே காத்திருக்கும்,
விண் தொனி கேட்டே நான் விழிக்க.

அவ்வோய்வில் நேரம் தூரம்,
இல்லை அங்கே ஒளிய இடமே
பாலைவனமோ பனிமலையோ
எல்லோர்க்கும் நல்ல ஓய்விடமே

இயேசுவினில் என் தூக்கமே,
தூரம் நம் அன்பரும் யாவரும்
ஆனால் மெய் ஆசீர்வாதமே,
மீண்டும் அழ நாம் எழோமே