சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார்.@லூக்கா 8:8
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

அனாமதேய ஸ்கேன்டிநேவியன் தோற்றம். திருச்சபை கவிதை, வில்லியம் அகஸ்டஸ் முல்லன்பர்க் 1823 (Al­migh­ty Fa­ther, Bless the Word). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 6, 2009),

டியூக் ஸ்டிரீட், 1793 ஜான் சி ஹேட்டன் அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 pdf nwc).

வல்ல பிதாவே, இதும் வார்த்தை,
யாம் கேட்டுணர்ந்தோமே இந்நேரம்,
எம் மனதிலும் அதோர் வித்தைப்போலே,
வளர்ந்துப்பின் பலன் தரவே.

போற்றுகிறோம் உந்தன் கிருபைகட் காய்,
எம் வாழ்வில் உம் அன்பை உணர்ந்தே,
இப்போதிங்கே தொழுதிடும் எல்லோரையும்
முடிவினில் சேரும் உம் வீடே.