அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.@எபிரெயர் 6:19
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

செப்டிமுஸ் வின்னர், 1868 (Whis­per­ing Hope) (🔊 pdf nwc). பாடல் புத்தக வெளியீடுகளில் இவரது புனைப்பெயர்களில் ஒன்றான ஆலிஸ் ஹாவ்தோர்ண் என சொல்லப்படுகிரது. சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 7, 2019),

portrait
செப்டிமுஸ் வின்னர் (1827–1902)

தேற்றிடும் தூதனின் செய்தி,
கேட்டிரா பாடமன்றோ?
திண்ணமாம் அன்பின் நற்செய்தி,
ஆறுதல் தேற்றுதலே,
காத்திரு இருள் சென்றோட,
காத்திரு புயலோய,
நாளை நல் பிரகாசம் காண்பாய்,
சாரலும் சென்றோய்ந்திடும்.

பல்லவி

மென்மையான, தேற்றுதல் செய்தியே,
ஆறுதலே, என் ஆன்மா மகிழ.

இருளும் சூழ்ந்திடும் இராவில்,
கண்ணேதும் காணா நேரம்,
நட்சத்ர ஒளி பிரகாசம் தாராதோ?
முன்னே காண,
இராவிருள் நம்மையும் சூழ,
ஏன் மனம் திகைக்குதே?
இருள் சென்றோடுமே வேகம்,
நற்பகல் வந்திடுமே,

பல்லவி

நம்பிக்கையே நல் நங்கூரம்,
உள்ளத்தின் ஆழத்திலே,
ஆண்டவர் சென்ற வழியாம்,
வென்றாரே மரணத்தை,
வந்திடு வந்திடு நீயும்
நைந்த என் உள்ளத்திற்கே,
தந்திடு மகிமை ஆசீர்,
எங்குமே சென்றிடாமல்.

பல்லவி