மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது.@வெளி 20:12
portrait
ஜேம்ஸ் மில்டன் பிளாக் (1856–1938)

ஜேம்ஸ் மில்டன் பிளாக், ரிவைவல் ஹிம்ஸ், தெரிந்தெடுத்து ஒழுங்கு படுத்தி திருத்தியவர் ஈ ஜே எம் கெர் (டொரோன்டோ கேனடா, வில்லியம் பிரிக்ஸ் 1889) (When the Roll Is Called Up Yon­der) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி, பிப்ரவரி 23, 2019. செர்ஜென்ட் யார்க் எனும் திரைப்படத்தில் பாடப்பட்டது.

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

ஆ எக்காள ஓசை கேட்குமே,
நம் காலம் காணாதே,
காலை தோன்றுமே, மா பேரொளி இதே,
மீட்கப்பட்டோர் யாவரும் அங்கே
அப்பொழுதே இதோ,நான் உள்ளேனிங்கே
என்பேனே நான் அங்கே,

பல்லவி

கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
நான் அங்கேதான் ஆ கூப்பிடும் அப்பொழுதே,
நான் அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நான் அங்கேதான் இருப்பேனே இருப்பேன்,
கூப்பிடும் அப்பொழுதே, நான்
அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.

அந்த காலை நாமும் கிறிஸ்துவில்
மரித்தோரும் எழ,
அங்கே கிறிஸ்துயிர்த்த மகிமையிலே,
அங்கே தேர்ந்தெடுத்தோர்
சேர்ந்தே வந்தே வானத்திற்க்கப்பால்,
நாம் உள்ளேனிங்கே என்போமே நாம் அங்கே,

பல்லவி

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.

பல்லவி

நாமும் காலை தோன்றி மாலை மட்டும்
சேவை செய்வோமே, அவர் அன்பை
மாண்பை போற்றி வாழ்த்துவோம்,
இந்த வாழ்வின் தொல்லை யாவும் தீர்ந்து
போனதுமே நாம். ஆம் உள்ளேனிங்கே
என்போமே நாம் அங்கே.

பல்லவி

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்

பல்லவி