என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?@யாக்கோபு 2:14
உருவப்படம்
சூசன் ஹ. பீட்டர்சன்
1950–2004

சூசன் ஹ. பீட்டர்சன், 1998 (What Good Can Come?). சௌ. ஜான் பாரதி (ஜூன் 11, 2020),

சார்லஸ் ஹ. காபிரியேல், 1898 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

என்ன நன்மை விஸ்வாசத்தால்?
உன் செயலில் காண்பித்திடு, நன்றாயிரு,
என்றே சொல்ல, உன் விசுவாசம் செத்ததே,

பல்லவி

கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ?
பயனில்லை செயலாற்றி காண்பித்திடு,
உன் விஸ் வாசம் சம்பூரணம்.

விஸ்வாசமே செயலன்றோ? நற்செயலே,
விஸ்வாசத்தால், போதாதே உன் நம்பிக்கையே,
பேய்களுமதை செய்யுமே,

பல்லவி

நம் தந்தையாம் ஆபிராமும், விஸ்வாசத்தில்,
தந்தையன்றோ? தன் மகனை, தந்திடவே,
துணிந்தவரே காண்பிக்க,

பல்லவி

வேசியான ராகாபுக்கும் தந்தாரன்றோ?
விஸ்வாசமே, இடம் தந்தே, காத்திட்டாளே,
மறைத்து வைத்தே ஆபத்தில்.

பல்லவி

ஆண்டவரே செயலாற்ற விஸ்வாசமே
ஈந்திடுமே, விஸ்வசமே தேவையன்றோ?
நான் மீண்டும் கேட்கா வண்ணமே.

பல்லவி