நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.@யாக்கோபு 4:14
portrait
பிலிப்பு டாட்ரிட்ஜ்
1702–1751

பிலிப்பு டாட்ரிட்ஜ் (1702–1751) (To­mor­row, Lord, Is Thine). சௌ. ஜான் பாரதி (மே 19, 2020),

இராகம் பிராங்கோனியா, யோஹன் பல்தாசர் கோனிக், 1738 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

நாளை உம் கரத்தில்,
மா வல்ல ஆண்டவா,
ஆம் சூர்யன் இங்குதிப்பதே
உம் வார்த்தை கேட்டன்றோ?

இம்மை ஒழிந்திடும்,
எம் வாழ்வு தீர்ந்தோடும்,
ஞானமாய் யாம் உம் அடியார்
இன்றைக்காய் வாழ்ந்திட.

பறந்திடும் காலம்,
ஆம் நித்ய வாழ்வுண்டே,
உம் வல்லமையால் நிச்சயம்
எவ்வயதாயினும்.

உம் வாக்கு எம் கடன்
யாம் கீழ்ப்படிந்திட,
தவறினோமே மீறினோம்
மாற்றமில்லாமலே.

இயேசுவிடம் சொல்வோம்
ஒளிபோல் வேகமாய்,
இவ்வாழ்வு தங்க கீற்றைப்போல்
மீளா இருளிலே.ஆமேன்