அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்.@கலாத்தியர் 1:4–5
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பேனி கிராஸ்பி: பிரைடஸ்ட் & பெஸ்ட், ஹோவார்ட் டோனே, மற்றும் ராபர்ட் லோரி (சிக்காகோ, இல்லிநாய்ஸ், பிக்லோ & மெய்ன் 1875) எண் 118 (To God Be the Glo­ry). சௌ. ஜான் பாரதி (செப்டம்பர் 19, 2018),

ஹோவர்ட் டோன் (1832–1915) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி,
தம் மகனை நமக்காய் தந்தாரே,
அவர் தம் ஜீவனை ஈந்து மீட்டார்,
நாம் மோட்சம் ப்ரவேசிக்க
வாசல் தந்தார்,

பல்லவி

போற்றுவோம் பாடுவோம்
அவர் சப்தம் கேட்போம்
போற்றுவோம் வாழ்த்துவோம்
மண்ணோர் மகிழ,
நம் ஆண்டவர் கிறிஸ்துவால்
நம்மை மீட்டார்,
எண்ணில்லா நன்மை செய்தார்
போற்றிடுவோம்.

அவர் தம் இரத்தத்தால் இரட்சித்தாரே,
தம் வாக்குதத்தம் விசுவாசித்தோர்கு,
மா பாவியாம் பாவியும் மன்னிப்பாரே,
மன்னிப்பீந்து பாவியை இரட்சிப்பாரே,

பல்லவி

வல்லமையான காரியங்கள் செய்தார்,
தம் சொந்த மகனாலே மகிழ்ச்சியே,
நாம் பின்பற்ற நல் வழி காட்டினாரே,
மென்மேலும் மகிழ்வோம்
நாம் மோட்சத்திலே.

பல்லவி