அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.@லூக்கா 12:40
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

சிட்னி டையர், டையர்’ஸ் சாமிஸ்ட் (லூஸ்வில்லே, கென்டக்கி: மார்டான் & கிறிஸ்வோல்ட் 1851) எண் 109 (Time Is Ear­nest). சௌ. ஜான் பாரதி (2018),

ஹென்டன், ஹென்றி ஆபிரஹாம் சீசர் மாலான், 1827; ஹார்மனி—லோவல் மேசன், 1838 (🔊 pdf nwc).

உருவப்படம்
லோவெல் மேசன் (1792–1872)

காலம் நேர்த்தியாய் நகருதே,
மரணம் வருதே நெருங்கியே,
பாவம் உணர்ந்து வாராயோ?
காலமும் மரணமும் உணர்த்துதே
காலமும் நேரமும் உணர்த்துதே.

வாழ்வும் நேர்த்தி முடிவினிலே,
மீண்டும் திரும்ப வருவதில்லை,
நித்தியத்தை சந்திக்க,
தீவிரமாய் இருப்பாயா?
தீவிரமாயிருப்பாயா?

மோட்ச வாழ்வு மிக நிஜமே,
உன்னை நோக்கி குரல் தருதே,
மாயும் மனிதா மகிழ்ச்சியோ?
நாளும் வீண் உன் வாழ்வினிலே,
நாளும் வீண் உன் வாழ்வினிலே.

நரகம் நிஜமே நெருங்கிடுதே,
நெஞ்சை நெருங்கும் வெந்தணலே,
ஐயோ அழிவாய் திரும்பாவிடில்,
இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால்,
இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால்.

நேர்த்தி நம் ஆண்டவர் வீழ்ந்து ஜெபி,
இன்னும் காலம் சென்றிடுதே,
தீர்ப்பின் ஆசனம் நேர்த்தியே,
மன்னிப்பின் காலம் இனி இல்லை,
மன்னிப் பின் காலம் இனி இல்லை.

நேசர் இயேசு அழைக்கிறார்,
உனக்காய் தம்மையே தந்தாரே,
உதறிடுவாயோ? அவர் அன்பை,
மேலிருந்து தந்தார் உனக்காக,
மேலிருந்து தந்தார் உனக்காக.

கேடுக்கெட்டோடி விலகியே நீ,
அசட்டை செய்தே, இறை மகனை
மதிகெட்ட பாவி நீ திரும்பிடாயோ?
தேவ கோபத்தாலே நீ அழிவாய்,
தேவ கோபத்தாலே நீ அழிவாய்.

உன் சிற்றின்ப ஆசைகள்,
உன்னை மீட்டு காக்குமா?
திக்கற்று நீயும் தனியனாய்,
திரிந்தும் எங்கும் ஏகிடாயே,
திரிந்தும் எங்கும் ஏகிடாயே.

சுற்றி நீ திரிந்தால், ஊக்கமின்றி,
அழிவாய் கவனம், மனந்திரும்பு,
எழுந்து நீ ஓடு காத்திராதே,
மீட்பர் உனக்காய் அங்கே பார்,
மீட்பர் உனக்காய் அங்கே பார்.