அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.@ஏசாயா 25:8
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

எட்மண்ட் லு. பட்ரி, 1884 (ஆ தோய் லா குளோரியே). முதன்முதல் சேண்ட்ஸ் இவான்ஜலிக்கஸ் (லாவுசேன்னே சுவிட்சர்லாந்து: 1885) பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் ரிச்சர்ட் பி ஹோய்லே, 1923. சௌ. ஜான் பாரதி (2018),

ஜீடாஸ் மெக்காபேயஸ், ஜார்ஜ் பெ. ஹான்டல், 1747 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஜார்ஜ் பெ. ஹான்டல்
1685–1759

கீர்த்தி புகழ்ச்சி,
உயிர்த்த நம் ராஜனுக்கே,
வெற்றி கொண்டீர் சாவின் மீது
என்றும் எப்போதும்.
பிரகாசித்த விண்ணின் தூதர்
கல்லறை புரட்டி,
சுற்றி வைத்த ஆடை பற்றி
வைத்தார் ஒழுங்காய்

பல்லவி

கீர்த்தி புகழ்ச்சி
உயிர்த்த நம் ராஜனுக்கே,
வெற்றி கண்டார் சாவின் மீது
என்றும் எப்போதும்.

பார், நம்மை காண்கிறார்,
உயிர்த்த நம் மீட்பரே,
வாழ்த்தி நம்மை அன்பாய் வாழ்த்தி
பயம் துக்கம் போக்கியே,
திருச்சபையாக நாமும்
வெற்றி கீதம் பாடுவோம்,
வாழ்கிறார் நம் மீட்பர் இன்றும்
சாவின் கூர் எங்கே?

பல்லவி

சந்தேகியோம் யாம்,
இது முதல் என்றென்றும்,
வாழ்வின் வேந்தர் நீரே,
நீர் அன்றி வாழ்வேது?
எம் வேதனையில் நாங்கள்
வெற்றி பெற்று ஓங்கவே,
யோர்தானையும் கடந்து
உம் வீடடையவே.

பல்லவி