அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு 18. பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.@யோவான் 19:17–18
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

சிசில் பிரான்சிஸ் அலேக்ஸான்டர், 1847 (There Is a Green Hill Far Away). சௌ. ஜான் பாரதி (மார்ச் 29, 2019),

கிரீன் ஹில், ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ், 1878 (🔊 pdf nwc).

உருவப்படம்
சிசில் பிரான்சிஸ் அலேக்ஸான்டர்
1818–1895

ஓர் குன்று தூர உண்டங்கே,
சுற்று சுவர் இன்றி,
நம் அன்பு நாதர் அங்கேதான்
சிலுவையில் மாண்டார்,

பல்லவி

ஆம் அன்பாய் நம்மை நேசித்தார்
ஆம் நாமும் நேசிப்போம்,
நாம் நம்பி செல்வோம் இரத்தத்தை,
அவர் சேவை செய்தே.

நாம் அறியோம் சொல்லலாகா,
அவரின் பாடுகள்,
நமக்காய்த்தானென்றறிவோம்
ஆம் வேதனைப்பட்டார்,

பல்லவி

நம்மை மன்னிக்கவே மாண்டார்,
நாம் நல்லோர் ஆகவே,
முடிவில் மோட்சம் செல்லவே
தம் இரத்தம் சிந்தினார்,

பல்லவி

நம் பாவம் தீர்க்க வேறொன்றும்
மற்றேதும் நன்றல்ல,
ஆம் மோட்ச வாசல் திறப்பாரே
நம்மை உள் சேர்க்கவே,

பல்லவி

ஆமேன்