ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.@வெளி 3:4
portrait
வில்லியம் கூப்பர்
(1731–1800)

வில்லியம் கூப்பர், கன்வேயரின் சங்கீதங்களும் பாடல்களும் எனும் தொகுப்பிலிருந்து 1772 (There Is a Foun­tain Filled with Blood). சௌ. ஜான் பாரதி (மார்ச் 15, 2019),

கிளென்சிங் பவுன்டன், 19ஆம் நூற்றாண்டின் செஞ்சுரி அமெரிக்கன் கேம்ப் மீட்டிங் இராகம் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே,
முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே.

சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே,
நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே.

ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்,
இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல்,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்.

நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம்,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே,
நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே.

மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை,
திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில்,
மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில்,
மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில்.

ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்,
தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்.

காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால்,
கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே,
உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே,
கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே.

ஆமேன்.