அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை@ரோமர் 12:1
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

பிரன்சிஸ் ரி ஹாவர்கல், 1874 (Take My Life and Let It Be). சௌ. ஜான் பாரதி (2017),

மோசார்ட், வொல்ப்கேங் அ. மோசார்ட் (1756–1791) (🔊 pdf nwc).

உருவப்படம்
பிரன்சிஸ் ரி ஹாவர்கல்
1836–1879

நான் அரிலேயின் இல்லத்திற்கு அவர்களை சந்தித்து ஐந்து நாட்கள் தங்கியிருக்க சென்றிருந்த சமயம், அங்கு பத்து பேர் இருந்தனர், அதில் வெகு நாள் ஜெபித்து பெறப்பட்ட சில கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவை அறியாத பலரும் இருந்தனர். அவர் எனக்கு ஓர் ஜெபம் தந்தார்…ஆண்டவரே இவ்வீட்டிலுள்ள அனைத்தையும் தாரும் என்று. பின்பு அவர் அவ்வண்ணமே செய்தார். நான் அந்த வீட்டைவிட்டு புறப்படுமுன் அவ்வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஓர் ஆசீர்வாதத்தை பெற்றனர். நான் அங்கிருந்த கடைசி இரவு இளைப்பாரிய பின்னர் அந்த இல்லத்தின் தலைவி அவர்களின் இரு பெண் பிள்ளைகளிடம் செல்லுமாறு என்னை பணித்தார்கள்…இருவரும் அழுதுகொண்டிருந்தனர், பின்பு இருவரும் விசுவாசித்து மகிழ்ந்தார்கள், அப்போது நடு நிசியாகியிருந்தது. நானும் மிக்க மகிழ்ச்சியாய் தூக்கம் வராமல் ஆண்டவரை துதித்துக்கொண்டும் நான் மனந்திறும்பிய நாளையும் நினைத்துக்கொண்டிருந்த சமயம் இந்த இரட்டை வரிகள் என் மனதில் தோன்றி தொனித்து ஒவ்வொன்றாய் செர்ந்து அனைத்தும் உமக்கே சமர்பித்தேன் எனும்வரை வந்து சேர்ந்தது

ஹவர்கள் கைப்பிரதிகளிலிருந்து

எந்தன் ஜீவன் இயேசுவே,
சொந்ததமாக ஏற்பீரே,
இந்த நேரம் எவ்வேளையும்,
உந்தன் புகழ் நான் பாடுவேன்.

கைகளால் என் செய்கையும்,
உந்தன் அன்பைக்காட்டவும்,
எங்கென் கால்கள் போயினும்,
விரைவாய் சீராய் செல்லுமே.

எந்தன் குரலின் ஓசையும்,
உமக்கே தந்தேன் இயேசுவே,
உதட்டின் நாவின் சொற்களும்,
உம் நற்செய்தி கூறவும்.

ஆஸ்தி பணமும் செல்வமும்,
சல்லி காசும் எனதல்ல,
அறிவு ஞானம் சிந்தையும்,
நீரே எடுத்து ஆண்டிடும்.

எந்த செயலும் எனதல்ல,
உமது திட்டமே நடத்துமே,
உள்ளம் ஆன்மா உமதன்றோ?
அதில் நீர் வாசம் செய்வீரே.

அன்பு ஆசை அனைத்துமே,
சமர்ப்பித்தேன் உம் பாதமே,
முற்றும் நீர் என்னை ஏற்பீரே,
உமது பிள்ளை நான் என்றுமே.