வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.@பிரசங்கி 5:12
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1719 (Sweet Is the Work, My God, My King). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 21, 2019),

டியூக் ஸ்டிரீட், ஜான் ஹுட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

அருமை உம் கிரியை எம் இராஜனே,
உம் நாமம் போற்றி நன்றி செலுத்த,
காலையில் உம் அன்பை உணர்ந்து நாங்கள்
உண்மைகளை இராவில் பேச.

அற்புதம் இந்நாள் நீர் தரும் ஓய்வு,
இவ்வுலகின் துன்பம் ஒன்றும் செய்யா,
என் உள்ளம் இசைந்தே தொனித்திடவே,
தாவீதின் யாழ் கீதம் போல.

என் உள்ளில் ஆனந்த ஜெய தொனியே,
போற்றிடும் அவர் செயல் வல்லமையும்
எங்கெங்கும் ஜொலிக்குதே அவர் படைப்பு,
ஆழ்ந்த உம் ஞானம் திவ்யமே.

ஆண்டவரே எனக்கும் பங்குண்டோ?
என் உள்ளம் உம் கிருபையால் நிரம்ப,
இன்பமும் தயவும் பொங்கிடவே,
தூய தைலம் நான் ஆனந்திக்க.

பாவ சாபம் என் துரோகிகளே,
பாதகன் இனி என்னை அண்டாமலே,
என் உள்ளில் எழும் தீய வாஞ்சைகளும்,
சாத்தானும் என்னை தீண்டாமல்.

நான் கண்டு ஏற்று உணர்ந்திடவே,
என் வாஞ்சை பூமியில் மாயையன்றோ?
இங்கெல்லா பிரயாசமும் இன்பமாகும்,
ஆங்கே நாம் வாழ விழைந்திட்டால்.

மூடர் தம் சிந்தனை வானுயரம்,
பேதைகளாய் வாழ்ந்து மரித்து,
தோன்றியே புல்லைப்போலே பூண்டைப்போலே,
மாள்வார் மீளா மரண குழியில்

ஆ என்ன விந்தை நான் கொண்டாடிட,
உம் நாமம் என்றென்றும் போற்றிடவே
ஆனந்த ஸ்தலத்தில் நான் காண்பேனே,
உம் முகம் நேரில் தரிசிப்பேன்.