ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.@ஆதியாகமம் 18:3
உருவப்படம்
எட்வர்ட் ஹென்றி பிக்கர்ஸ்டெத்
(1825–1906)

எட்வர்ட் ஹென்றி பிக்கர்ஸ்டெத், 1875 (Peace, Per­fect Peace). சௌ. ஜான் பாரதி (மார்ச் 28, 2019),

பாக்ஸ் டேகும், ஜார்ஜ் தாமஸ் கால்ட்பெக் & சார்லஸ் ஜான் வின்சென்ட் 1876 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

முழு சமாதானம் இருள் சூழ் இப்பூமியில்
இயேசுவின் இரத்தம் தரும் மெய் அமைதி,

முழு சமாதானம் வாழ்வின் சுமை நேரமே
செய் என் றும் கர்த்தர் சித்தம் நன்றதுவே.

முழு சமாதானம் துக்க துன்ப நேரமே
கிறிஸ்த்துவில் காண்பாய் என்றும் நிம்மதியே.

தூரச்சென்ற நம் நண்பருடனுமே நல்
ஐக்கியமே, கர்த்தராலே நாம் பத்ரமே.

காணாதெதிர் காலமும் அமைதி அங்கே
நம் இயேசு உண்டு பயம் ஏன் நம்புவோம்

முழு சமாதானம் மரணம் வர, வென்றாரே
மரணத்தை அவரே நமக்காய்.

போதுமே இவ்வுலக போராட்டம், நம்மை
அழைக்கிறாரே அவர் விண் வீட்டிற்கே.

முழு சமாதானம் உடல் வேதனையிலும்
நம் இயேசுவின் மனதுருக்கம் காக்கும்.