ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.@ஆதியாகமம் 18:3
உருவப்படம்
பேனி கிராஸ்பி (1820–1915)

பேனி கிராஸ்பி, 1868 (Pass Me Not, O Gen­tle Sav­ior). முதன்முதல் ஹோவார்ட் டோனே அவர்களின் தியானப்பாடல்களில் வெளியானது (நியூயார்க் 1870). சௌ. ஜான் பாரதி (2018),

ஹோவார்ட் டோனே (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

என்னை கடந்து செல்லாமல்
மன்றாட்டைக்கேளும்,
வேறு யாரும் கூப்பிட்டாலும்,
கேளும் விண்ணப்பம்.

பல்லவி

மீட்பரே, மீட்பரே,
மன்றாட்டைக்கேளும்
யாரும் உம்மைக்கூப்பிட்டாலும்,
என் அழுகுரல் கேளும்.

உம் கிருபாசனத்தினண்டை
மெய் விடுதலை,
நானும் நின்று முழங்காலில்,
நம்பச்செய்யுமே.

பல்லவி

உந்தன் வல்லமையை நம்பி
உம்மை நோக்குவேன்,
எந்தன் நொறுங்குண்ட ஆவி
தயவால் காரும்.

பல்லவி

என் சுகத்தின் ஜீவ ஊற்றே
வாழ்வினும் மேலே,
பூவில் யார் உண்டு
எனக்கு மோட்சத்திலுமே.

பல்லவி