எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.@ஆமோஸ் 4:10
உருவப்படம்
பிலிப்பு டாட்ரிட்ஜ்
(1702–1751)

பிலிப்பு டாட்ரிட்ஜ் (1702–1751) (Our Na­tion Seemed to Ru­in Doomed). சௌ. ஜான் பாரதி (மார்ச் 30, 2020),

தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அழிந்தேபோமோ மானுடம்?
எரியும் புல்லைப்போல்,
சுற்றும் முற்றும் பரவினும்
தயவாய் காக்கிறார்.

இன்னமும் காப்பேன் காத்திடுவேன்,
பாவத்தால் கோபமே,
என் பொறுமை இன்னும் உண்டு
மீட்டிடுவேன் காப்பேன்.

இக்கருணை யார் போற்றுவார்,
மனதுருக்கமும்,
நொந்துள்ளோர்க்கு யார் சொன்னாரோ?
உம் முகம் நோக்கவே.

இப்படியான நாட்களில்,
வந்தும்பாதம் வீழ்ந்து,
மீண்டும் உம்மை கோபமூட்ட,
செல்வோம் பாவ வாழ்க்கை.

தூரே சென்றோம் யாம் விலகியே,
ஆண்டவர் அன்பினின்று,
எஞ்சியுள்ள நாம் பயந்தே
சோர்வால் அயர்ந்தோமே.

கண்டிக்கப்பட்டே மீட்க்கப்பட்டு,
உம் கரம் விட்டகன்றே,
இத்தீயில் யாமும் வீழ்வோமோ?
மாண்டே அழிவோமோ?

அழியும் அவ்வெளிச்சத்தால்,
மற்றோர் அறிவோமே,
உம் தீர்ப்பின் மா அகோரமே,
கண்டவர் உணர்வார்.

நீர் கோளும் பாவியாம் எம் ஓலம்,
உம் செவி சாய்த்திடும்,
பெலவீனரின் குரலே,
மனதுருகியே.

உம் தூய ஸ்வாசம் ஊதியே,
நல் ஒளி ஏற்றிடும்,
காப்பாற்றப்பட்டவராலே நீர்,
மகிமை கொள்வீரே.

ஆமேன்.