அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.@சங்கீதம் 149:1
portrait
நாகூம் டேட்
(1652–1715)

நாகூம் டேட், 1696 (O Praise Ye the Lord). முதன்முதல் ஹோவார்ட் டோனே அவர்களின் தியானப்பாடல்களில் வெளியானது (நியூயார்க் 1870). சௌ. ஜான் பாரதி (மார்ச் 11, 2019),

ஹேனோவர், வில்லியம் கிறாப்ட், 1708 அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது, நாகூம் டேட், நிக்கோலாஸ் பிராடி இவர்களின் சங்கீதங்களின் புதிய வடிவத்திற்கு இணைப்பு, 6 ஆம் பதிப்பு (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

நாம் போற்றிடுவோம் மெய் மனதுடன்,
அவர் கிருபையை, சூழ்ந்தானந்திப்போம்,
சீயோன் மக்களாக மீட்பரை வாழ்த்தி,
அவர் மேல் சார்ந்தே, என்றும் நம்பியே நாம்.

மார்பினில் சார்ந்தே அவர் மந்தையாய்,
அவர் காப்பாரே, எத்தீங்கும் நேரா,
பொக்கிஷமாமே நாம் அமைதி தந்து,
அளவில்லாமலே தாழ்மையுள்ளோர் மேல்.

வல்லமை நம்பி அவர் பிள்ளையாய்,
அவர் நம் ஒளி, நம் பட்டயமே,
மீட்பின் ராஜனாம் யார் எதிர்த்து நிற்பார்,
கெம்பீரிப்போமே, புது துதியாலே.