கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.@லூக்கா 23:33
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

சாரா ஜீன் கிரஹாம், இரட்சண்ய சேனையின் இசை வெளியீடான சால்வேஷனிஸ்ட் ன் முதல் பதிப்பு ஜீலை 1886 (On the Cross of Cal­va­ry). இதன் ஆசிரியர் குறிப்பிடப்படவில்லை, பின்னர் 1931 ல் “வார் கிரை” பத்திரிக்கையில் தாமஸ் ஸ்காட் கிரஹாமின் பெயரை குரிப்பட்டுள்ளார்கள். சௌ. ஜான் பாரதி (டிசம்பர் 17 2018),

வில்லியம் ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் (1838–1921) அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 pdf nwc).

உருவப்படம்
வில்லியம் கிர்க்பேட்ரிக் (1838–1921)

கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே,
தம் தூய இரத்தத்தையே, சிந்தியே,
நம்மை மீட்க, ஜீவ ஊற்றாய் பாய்ந்திடுதே,
பனி போல வெண்மையாய், எனக்காக
கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,

பல்லவி

கல்வாரியில் கல்வாரியில்,
எனக்காக, மரித்தாரே
ஆம் சிலுவையில் அன்று.

ஆ என்ன, விந்தையிது? அவர் பாதம்,
சேர்த்தாரென்னை, விந்தையான தெய்வன்பிதே,
என்னையே, அர்ப்பணிப்பேன், எந்தன் ஆவி
எந்தன் எல்லாம், முற்றும் தந்தேன் ஆம் மெய்யாய்,
எனக்காக, கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,

பல்லவி

ஏற்றுக்கொள்ளும், என் இயேசுவே, என்றும் என்னை,
உம் பிள்ளையாய், நீரே என்றும் என் சொந்தமே,
என்னுடன், வாசம் செய்யும், பாவம். போக்கி
தூய்மையாக்கும், உந்தன் இரத்தம் சிந்தினீர்,
எனக்காக, கல்வாரி மீதே சிந்தினீர், உம் இரத்தமே,

பல்லவி

சிலுவையில் தொங்கும் நேரம், இருள் மேகம்,
சூழ்ந்ததே, எல்லாம் முடிந்ததென்றார்,
தலை சாய்த்து ஜீவன் விட்டார். அவர்
ஜீவன் தந்ததினால், மனுக்குலம் மீண்டதே,
நமக்காக, கல்வாரி மீதே, சிந்தினார் தம் இரத்தமே

பல்லவி