வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.@மத்தேயு 11:28
உருவப்படம்
ஜான் ஹேயன்ஸ் ஹோம்ஸ்
(1879–1964)

ஜான் ஹேயன்ஸ் ஹோம்ஸ், 1907 (O God, Whose Smile Is in the Sky). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 21, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஆ வானிலே புன்னகைத்தே,
கடல் மேல் உலவும் நீர்,
மீண்டும் மகிழ்ந்தே யாம் வந்தோம்,
எம் பாரம் தாங்காமல்.

எண்ணில்லா ஓசை ஊடே யாம்,
ஓய உம் அமைதியில்,
காற்றும் அலையும் ஒன்றாக,
சேர்ந்திசை பாடுதே.

உழைத்தே ஓய்ந்தோர் போலவே,
ஓய யாம் ஏங்கியே,
வாழ்வின் சோதனை ஏக்கங்கள்,
உம் அண்டை தீரவே.

வீணாய் சிதரும் சிந்தனை
பயங்கள் போக்குமே,
ஆராய்ந்து களைந்து நீக்குமே,
எம் கவலை பாவமும்.

கடல் மேல் ஒளிரும் சூர்யன் போல்,
அமைதி விண்மீன் போல்,
ஒளிர்ந்தெம்மேல் நீர் வீசிடும,
உம் அன்பின் ஜோதியாய்.