அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.@லூக்கா 17:5
உருவப்படம்
ஜான் பாக்கஸ் டைக்ஸ்
(1823–1876)

வில்லியம் ஹில்லே பாத்தர்ஸ்ட, சாம்ஸ் அண்டு ஹிம்ஸ் 1831 (O, for a Faith That Will Not Shrink) சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 28, 2019),

தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், ஆங்கில திருச்சபைகளுக்கான ஹிம்னலில் ஜான் கிரே 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

குன்றிப்போகா விஸ்வாசமே,
சூழ்ந்தேகும் யாராலும்,
விளிம்பில் நடுங்கி சாயாமல்
நின்றேகும் பூவினில்.

புலம்பிடாதே காத்திடும்,
கண்டிக்கும் கோலண்டை,
துக்கத்துன்பம் வருங்காலை
அண்டுமவர் பாதம்.

பிரகாசிக்கும் மா தெளிவாய்,
சோதனை நேரமே,
ஆபத்திலே அதஞ்சாமல்
இருளின் போதிலும்.

உலகின் சீற்றம் மூழ்காதே,
இன்ப மகிழ்ச்சியும்,
பாவ கடலிலும் மூழ்காதே
எப்பேராற்றலுமே.

இருளிலும் சந்தேகியா,
கடின பாதையில்,
முடிவின் காலம் தாங்குமே
மெய்யொளி விஸ்வாசம்.

தாரும் இவ்வாராம் விஸ்வாசம்,
என்ன நேர்ந்தாலுமே,
ருசிப்போம் மெய் சமாதானத்தின்
இன்பம் விண்வீட்டிலே.

ஆமேன்