ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.@வெளி 3:4
portrait
வில்லியம் கூப்பர்
1731–1800

வில்லியம் கூப்பர், கன்வேயர் எனும் சங்கீதங்களும் பாமாலைகளும் தொகுப்பிலிருந்து 1772, இப்பாடலை குறித்து கூப்பர் தன் அத்தைக்கு எழுதிய வரிகளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், நான் அதிகாலமே எழுத ஆரம்பித்து இரண்டு சரணங்கள் முடிந்ததும் தூங்கிவிட்டேன், பின்பு எழுந்ததும் மூன்றாம் நான்காம் சரணங்கள் நான் அடிக்கடி அனுபவிக்கும் விதத்தில் என் மனதில் அவை மென்குரலில் சொல்லக்கேட்டேன். சௌ. ஜான் பாரதி (ஜனவரி 29, 2019),

ஸ்கெய்த்நெஸ், ஸ்காட்டிஷ் சால்டர், 1635 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆண்டவருடன் நடக்க
தெய்வீக அமைதி,
விண் ஜோதியே பிரகாசமாய்
என்னை நடத்துமே.

எங்கே என் ஆசீர்வாதமே,
நான் கண்ட ஆண்டவர்,
என் ஆன்மத்தை தூய்மையாக்கும்
அவ்வார்த்தை எங்கேயோ?.

என் சாந்தம் என் சமாதானம்,
நினைவில் நின்றதே,
வெற்றிடமாய் என்னையுமே
விட்டகன்றததே.

மீண்டும் வர அழைக்கிறேன்
அத்தூய ஆவியை,
அமைதியின் நல் தூதனை
நான் துக்கிக்க செய்தேன்.

என் நெஞ்சின் பிரிய சொரூபம்
அதேதாயினுமே,
நான் அகற்றி எரிந்திட்டே
உம்மை மாத்ரம் தொழ.

நான் இன்னுமும்மை நெருங்கி
என் அன்பின் ஆண்டவா,
மெய் ஒளி வழி நடந்து
உம் அண்டை சேருவேன்.

ஆமேன்