நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.@மத்தேயு 11:29
உருவப்படம்
பேனி கிராஸ்பி
(1820–1915)

பேனி கிராஸ்பி, 1886 (O Child of God). இரா சேங்கி ஜேம்ஸ் மெக்கிரஹனன் மற்றும் ஹார்ஜ் ஸ்டெபின்ஸ் (நியூயார்க், சின்சினாட்டி ஜான்ஸ் ஆலையம் பிக்லோ & மெய்ன் 1887). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 30, 2018),

கூக் ஐலேண்ட்ஸ், இரா டேவிட் சாங்கி (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஓ ஆண்டவரின் பிள்ளையே
நீ காத்திருப்பாயே, நீ போகும் பாதை
ஆழ்ந்த இருள் சூழ்ந்ததாயினும்,
நல் நம்பிக்கை கொண்டே நீயும்
பார் காலை மீண்டுமே, ஆ ஆனந்தமே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.

ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன்னை நேசிக்கின்றார்,
நீ அவர் பிள்ளை ஆம் அன்றோ?
உன் கரம் பிடித்தே, நீ தனியனும் அல்லவே,
பார் காலை மட்டுமே, கண் மூடாமல்,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.

ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன் பயம் போக்குவார்,
மேல் நோக்கி உன்னை தூக்கியே
நல்லோர்களிடமே, குனிந்தே அன்பாய்
தம்மோடே என்றுமானந்திக்க தம் வீட்டிலே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.