அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்.@சங்கீதம் 91:4–5
உருவப்படம்
சபீன் பேரிங் கௌள்ட் (1834–1924)

சபீன் பேரிங் கௌள்ட்: தி சர்ச் டைம்ஸ்’ல் பிப்ரவரி 16 1867 (Now the Day Is Over). சௌ. ஜான் பாரதி, ஜனவரி 8, 2019.

யுடோக்சியா, சபீன் பேரிங் கௌள்ட் சபீன் பேரிங் கௌள்ட், 1868 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

முடிந்ததிந்நாளும், இரா நெருங்குதே,
மாலை நிழல் சாய்ந்து வானம் சேர்ந்ததே,

இப்போதிருள் சூழ தோன்றும் நட்சத்ரம்,
மலர் பட்சி விலங்கும் சாய்ந்தே தூங்கிடும்,

இயேசுவே நீர் தாரும் சோர்ந்த எங்கட்கு,
உந்தன் ஆசீர்வாதம் எம் கண் மூடட்டும்.

உந்தன் பிள்ளைகட்கு உம்மை காட்டிடும்,
கடல் வழி செல்வோர் புயல் கடக்க,

துன்புற்றோர்கு தீரும் வலி வேதனை,
தீங்கு செய்ய நிற்போரை தடுத்திடும் நீர்,

நீண்ட நிசி நேரம் தூதர் காவல்தான்,
வெண் சிறகின் கீழே தூங்கும் எங்கள்மேல்,

காலை வரும்போது நாங்கள் எழுந்து
பாவம் சோர்வில்லாமல் தூய உம் கண்ணில்,

மகிமை பிதாவே, மைந்தனுக்குமே,
தூய ஆவிக்கின்றும் என்றும் மகிமை.