அவன் அதைக்கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.@மத்தேயு 18:13
உருவப்படம்
எலிசபெத் சி. கிளிபேன்
1830–1869

எலிசபெத் சி. கிளிபேன், 1868 (The Nine­ty and Nine). சௌ. ஜான் பாரதி (மார்ச் 29, 2019)

இரா டேவிட் சாங்கி, 1894 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

அந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
கூடாரத்தில், ஒன்று மட்டும் அலைந்து
காட்டில் தொலைந்து தங்க வாசல் வெளியே,
அது பாலைவனம் எங்கும் தூரமாய்
நல் மேய்ப்பனின் அன்பான மேய்ச்சலின்றி,
நல் மேய்ப்பனின் அன்பான காவலின்றி.

இந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
போதாதா? நல் மேய்ப்பன் சொல்கிறார்,
எந்தன் ஆடது என்னை விட்டே சென்றதே,
அந்த பாதையும் கடினம் தூரம் தான்,
ஆனாலும் நான் சென்று தேடிடுவேன்,
நான் சென்றங்கே என் ஆட்டை தேடிடுவேன்.

நல் மேய்ப்பன் கடந்த ஆழம் தூரம்
யார் அறிவார்? அவர் கடந்த இருளும்
ஆம் தன் ஆட்டை மீட்க சென்ற தால்,
அதன் ஓசை கேட்டு சென்றங்கே,
ஆம் சாகும் தருணம் சப்தம் கேட்டு,
ஆம் சாகும் தருணம் கண்டெடுத்தார்.

நீர் நடந்த பாதையில் இரத்தம் சிந்தியதால்
பாதை காட்டுதே, அது தொலைந்து அலைந்த
ஆட்டை மீட்க மீட்டு மந்தை சேர்க்க,
ஆம் உந்தன் கைகளில் காயம் ஏன்?
ஆம் இன்று முட்களும் துளைத்ததே,
ஆம் இன்று முட்களும் துளைத்ததே.

ஆம் மலைகள் மேலும் பாறைகள் மீதும்
கேட்குதே, மேலோக வாசலில் ஆனந்தம்
நான் மீட்டேன் எந்தன் ஆட்டை,
ஆம் தூதரும் சிம்மாசனம் முன்பே,
ஆம் ஆண்டவர் மீட்டார் தம் சொந்தத்தையே,
ஆ ஆனந்தம் ஆண்டவர் மீட்டுக்கெண்டார்.